சின்னக்கனலில் உள்ள சுமார் 364.5 ஹெக்டேர் பரப்பளவு நிலத்தைக் காப்புக் காடுகளாக அறிவிக்கும் ஒரு திட்டத்தை அரசு நிறுத்தி வைத்துள்ளது.
அதிக எண்ணிக்கையிலான வண்ணத்துப் பூச்சிகளுக்கு மிகவும் ஒரு புகழ் பெற்ற பாப்பாத்தி சோலைப் பகுதியின் பெயர் வண்ணத்துப்பூச்சிகள் என்று பொருள்படும் பாப்பாத்தி என்ற தமிழ்ச் சொல்லில் இருந்து பெறப்பட்டது.
பாப்பாத்தி என்றால் வண்ணத்துப் பூச்சி என்றும், சோலை என்றால் சோலை நிலம் என்று பொருள்படும்.
தமிழ்நாட்டின் மழை மறைவுக் காடுகளிலிருந்து மூணாரின் உயரமான பகுதிகளுக்கு இடம் பெயரும் போது பல வண்ணத்துப் பூச்சிகள் இப்பகுதியை வந்தடைகின்றன.
பாப்பாத்தி சோலைப் பகுதி, பல வகை தைலம் (இம்பேடியன்ஸ் பால்சமினா) மற்றும் அரிய வகை மல்லிகை மலர்கள் நிறைந்த பகுதியாகக் கருதப்படுகிறது.
இது சதுரங்கப்பாரா மலைகளுக்கும் மதிகெட்டான் சோலை பகுதிக்கும் நடுவில் அமைந்துள்ளது.
கடந்த ஆண்டு இப்பகுதியில் நீலக்குறிஞ்சி மலர் பூத்தது.