இந்தியப் பிரதமர், நாட்டின் பிரதான நிலப்பகுதியை ராமேஸ்வரத்துடன் இணைக்கும் பாம்பன் இரயில் பாலத்தைத் திறந்து வைத்துள்ளார்.
இந்தப் பாலம் ஆனது நாட்டின் முதல் செங்குத்து தூக்கு இரயில் பாலமாகும்.
இது 2022 ஆம் ஆண்டு டிசம்பர் மாதத்தில் செயல்பாடுகள் நிறுத்தப்பட்ட நூற்றாண்டு காலப் பழமையான பாம்பன் பாலத்திற்கு மாற்றாக அமைக்கப்பட்டுள்ளது.
பழைய பாம்பன் இரயில் பாலத்தின் கட்டுமானப் பணிகள் 1911 ஆம் ஆண்டு ஜூன் மாதத்தில் தொடங்கி, அந்தப் பாலம் 1914 ஆம் ஆண்டு பிப்ரவரி 24 ஆம் தேதியன்று திறக்கப் பட்டது.
இலங்கையில் புகையிலை உற்பத்தியாளர்களால் புகையிலை வர்த்தகத்தை நன்கு ஊக்குவிப்பதற்காக இந்தப் பாலம் உருவாக்கப்பட்டது.