TNPSC Thervupettagam

பாரடைஸ் பேப்பர்ஸ்

November 7 , 2017 2576 days 811 0
  • அண்மையில் ஆப்பிள்பை எனும் சர்வதேச சட்ட நிறுவனத்தால் திரட்டப்பட்ட “பாரடைஸ் பேப்பர்” எனும் அறிக்கை சர்வதேச புலனாய்வு பத்திரிக்கையாளர் அமைப்பால் (ICIJ) வெளியிடப்பட்டுள்ளது.
  • “பாரடைஸ் பேப்பர்” என்பது 180 நாடுகளைச் சேர்ந்த வரிஏய்ப்பு செய்து வெளிநாடுகளில் முதலீடு செய்த உலகின் பெரும் சக்திவாய்ந்த நபர்கள் மற்றும் கார்பரேட் நிறுவனங்களைப் பற்றிய தகவல்கள் அடங்கிய 1.34 கோடி ஆவணங்களின் தொகுப்பாகும்..
  • பாரடைஸ் பேப்பர் விவகாரம் தொடர்பான விசாரணைக்கு மத்திய நேரடி வரி ஆணையத் தலைவரின் கீழ் அமைக்கப்பட்ட பல்வேறு அமைப்புகள் அடங்கிய பல்துறை குழுவை (Multi-Agency Committee ) மத்திய அரசு மாற்றியமைத்துள்ளது.
  • இதே குழு இதற்கு முன்பு பனாமா லீக்ஸ் விவகாரத்திற்காக 2016 ல் அரசால் அமைக்கப்பட்டது.
  • இந்த அறிக்கையின் படி, 180 நாடுகளில் அதிக நபர்களைக் கொண்ட நாடுகள் அடிப்படையில் இந்தியா 19 இடத்தில் உள்ளது.
  • பன்னாட்டு புலனாய்வு பத்திரிக்கையாளர் கூட்டமைப்புடன் சேர்ந்து அதன் இந்திய பங்காளரான  இந்தியன் எக்ஸ்பிரஸ் இந்த பாரடைஸ் பேப்பர்ஸ் அறிக்கையை வெளியிட்டுள்ளது.
ICIJ – International consortium For Investigative Journalist - (சர்வதேச புலனாய்வு பத்திரிக்கையாளர் கூட்டமைப்பு)  புலனாய்வு விவகாரங்களில் தீவிர விசாரணைகளை மேற்கொள்ளும் 70 நாடுகளைச் சேர்ந்த 200க்கும் மேற்பட்ட புலனாய்வு பத்திரிகையாளர்களின் ஓர் உலக கூட்டு அமைப்பே ICIJ ஆகும். தோற்றம்:
  • 1977இல் அமெரிக்க பத்திரிக்கையாளரான சுக் லீவிஸ் என்பவரால் இது தோற்றுவிக்கப்பட்டது.
  • இதன் தலைமையகம்- அமெரிக்காவின்  வாஷிங்டன் D.C அமைந்துள்ளது.
  • இதற்கு முன் இக்கூட்டமைப்பு 2016-ல் “பனாமா பேப்பர்ஸ்” அறிக்கையை வெளியிட்டது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்