பாரதியார் பல்கலைக் கழகமானது இரண்டு செயல் முறைகளுக்காக வேண்டி காப்புரிமையினைப் பெற்றுள்ளது. அவை,
திடக்கழிவுகளிலிருந்து உலோகங்களைப் பிரித்தெடுத்தல் மற்றும்
நீரிழிவு நோய்க்குச் சிகிச்சையளிக்க ஒரு பழ மரத்தை (fruit tree) பயன்படுத்துதல்
முதல் காப்புரிமையானது துணைப் பேராசிரியர் K. இராமச்சந்திரன் மற்றும் ஆராய்ச்சியாளர்கள் R. சரவணக் குமார் மற்றும் P.V. ஆனந்த பத்மநாபன் ஆகியோரால் உருவாக்கப்பட்ட “உலோகங்களுடன் கூடிய திடக்கழிவுகளிலிருந்து உலோகங்களைப் பிரித்தெடுத்தல்” என்ற முறைக்கு வழங்கப்பட்டுள்ளது.
இரண்டாவது காப்புரிமையானது நீரிழிவு நோயைக் குணப்படுத்த சிசைஜியம் முன்டகம் (Syzygium mundagam - காட்டு நாவல் பழமரம்) எனும் பழத்தினைப் பயன்படுத்தும் முறைக்கு வழங்கப்பட்டுள்ளது.
பேராசிரியர் T. பரிமேலழகன் மற்றும் ஆராய்ச்சியாளர் ராகுல் சந்திரன் உள்ளிட்டக் குழுவானது இந்தப் பழ மரம் குறித்த ஆராய்ச்சியை மேற்கொண்டு அதன் பட்டைகளிலிருந்து சில செயல்மிகு மூலக்கூறுகளைப் பிரித்தெடுத்து அதனைப் பல்வேறு சோதனைகளுக்கு உட்படுத்தினர்.