TNPSC Thervupettagam

பாரதிய அந்தரிக்ஸ் நிலையம்

September 24 , 2024 4 days 93 0
  • ககன்யான் திட்டத்தின் நோக்கெல்லையினை விரிவுபடுத்துவதன் மூலம் பாரதிய அந்தரிக்ஸ் நிலையத்தின் முதல் பிரிவைக் கட்டமைப்பதற்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.
  • இந்தியா 2035 ஆம் ஆண்டிற்குள் செயல்பாட்டு நிலையில் உள்ள பாரதிய அந்தரிக்ஸ் நிலையத்தையும், 2040 ஆம் ஆண்டிற்குள் இந்திய விண்வெளி வீரர்கள் அடங்கிய நிலவுப் பயணத் திட்டத்தினையும் உருவாக்கத் திட்டமிட்டுள்ளது.
  • இந்தியாவின் விண்வெளி நிலையத்தின் முதல் தொகுதியானது, பாரதிய அந்தரிக்ஸ் நிலையம் (BAS-1) என்று அழைக்கப்படுகிறது.
  • இது 2028 ஆம் ஆண்டில் அதன் முதல் தொகுதியுடன் தொடங்கப்பட உள்ளது.
  • 2000 ஆம் ஆண்டு முதல் செயல்பட்டு வரும் ISS ஆனது NASA, Roscosmos, ESA, JAXA மற்றும் CSA ஆகியவற்றின் கூட்டு முன்னெடுப்பாகும்.
  • "விண்ணுலக அரண்மனை" என்று பொருள்படும் சீனாவின் டியாங்காங், 2022 ஆம் ஆண்டு ஜூன் மாதத்தில் அதன் செயல்பாடுகளைத் தொடங்கியது.
  • ரஷ்யா தனது சொந்த நிலையமான ரஷ்ய சுற்றுப்பாதை விண் நிலையத்தை (ROS) உருவாக்கத் திட்டமிட்டுள்ளது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்