TNPSC Thervupettagam

பாரதிய பாஷா புஸ்தக் திட்டம்

February 9 , 2025 18 days 88 0
  • 2025 ஆம் ஆண்டு மத்திய நிதிநிலை அறிக்கையானது பாரதிய பாஷா புஸ்தக் என்ற ஒரு திட்டத்தினை அறிமுகப்படுத்தியது.
  • இது பள்ளி மற்றும் உயர்கல்வி மாணவர்களுக்கு இந்திய மொழிகளில் எண்ணிம வழியிலான புத்தகங்களை வழங்குவதற்கான ஒரு புதிய முன்னெடுப்பாகும்.
  • இந்தத் திட்டம் ஆனது, பிராந்திய மொழிகளில் நூல்களை வழங்குவதன் மூலம் கல்வி கற்றலை மேலும் அணுகக் கூடியதாக மாற்றுவதை நோக்கமாகக் கொண்டுள்ளது.
  • இந்தத் திட்டத்தின் கீழ், பள்ளிகள் மற்றும் பல்கலைக்கழகங்களில் உள்ள மாணவர்கள் எண்ணிம வடிவங்களில் பாடப்புத்தகங்கள் மற்றும் கற்றல் சார் மீதான மூலங்களை அணுகலாம்.
  • மொழியியல் பன்முகத் தன்மையை நன்கு ஊக்குவிக்கும் அதே வேளையில், கல்வியில் தொழில்நுட்பத்தினை ஒருங்கிணைக்கச் செய்வதற்கான அரசின் ஒரு உந்துதலுடன் இந்த நடவடிக்கையும் ஒத்துப் போகிறது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்