TNPSC Thervupettagam

பாரதிய வாயுயான் விதேயக் 2024

August 6 , 2024 112 days 176 0
  • மத்திய பொது விமானப் போக்குவரத்துத் துறை அமைச்சகம், பாரதிய வாயுயான் விதேயக், 2024 மசோதாவினை (விமானப் போக்குவரத்து மசோதா) பாராளுமன்றத்தில் முன் வைத்துள்ளது.
  • இந்தப் புதியச் சட்டம் ஆனது, பிரிட்டிஷ் ஆட்சிக் காலத்தில் இருந்த காலாவதியான 1934 ஆம் ஆண்டு விமானச் சட்டத்திற்கு மாற்றாக, இந்தியாவின் விமானப் போக்குவரத்து விதிமுறைகளை மாற்றியமைப்பதை நோக்கமாகக் கொண்டுள்ளது.
  • 1934 ஆம் ஆண்டு முதல் இச்சட்டத்தில் 21 திருத்தங்கள் செய்யப்பட்டுள்ளன.
  • எந்தவொரு விமானம் அல்லது விமான ரகத்தின் வடிவமைப்பு, உற்பத்தி, பராமரிப்பு, உடைமை, பயன்பாடு, செயல்பாடு, விற்பனை, ஏற்றுமதி அல்லது இறக்குமதி ஆகியவற்றை ஒழுங்குமுறைப்படுத்துவதற்கான விதிகளை இந்த மசோதா கொண்டு உள்ளது.
  • இந்த மசோதாவில் மேற்கொள்ளப்பட்டுள்ள சில குறிப்பிடத்தக்க மாற்றங்களில் ஒன்று "விமானம்" என்ற சொல்லின் புதுப்பிக்கப்பட்ட வரையறை ஆகும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்