சென்னையில் உள்ள இந்திய தொழில்நுட்ப நிறுவனத்தைச் சேர்ந்த ஆராய்ச்சியாளர்கள் ஏற்கனவே பாரதி எழுத்து வடிவம் எனப் பெயரிடப்பட்ட ஒன்பது இந்திய மொழிகளுக்கான ஒரு ஒருங்கிணைந்த எழுத்து வடிவத்தை உருவாக்கி இருந்தனர்.
தேவநாகரி, வங்காளி, குர்முகி, குஜராத்தி, ஒடியா, தெலுங்கு, கன்னடம், மலையாளம் மற்றும் தமிழ் ஆகிய எழுத்து வடிவங்கள் இதில் ஒருங்கிணைக்கப் பட்டுள்ளன.
தற்பொழுது இந்த ஆராய்ச்சியாளர்கள் ஒரு படி மேலே சென்று, பல மொழி ஒளியியல் உரு அங்கீகார (OCR - optical character recognition) திட்டத்தைப் பயன்படுத்திப் பாரதி எழுத்து வடிவத்தில் ஆவணங்களைப் படிப்பதற்கான ஒரு முறையை உருவாக்கி உள்ளனர்.