ஐஐடி – மதராஸ் நிறுவனத்தைச் சேர்ந்த விஞ்ஞானிகள் அடங்கிய ஒரு குழுவானது பன்மொழி ஒளியியல் பண்பு கொண்ட அங்கீகாரத் திட்டத்தினைப் பயன்படுத்தி பாரதி எழுத்து வடிவத்தில் உள்ள ஆவணங்களைப் படிப்பதற்கான ஒரு முறையை மேம்படுத்தியுள்ளனர்.
பாரதி என்பது இந்தியாவிற்காக ஒரு பொது எழுத்து வடிவமாகப் பரிந்துரைக்கப்பட்டிருக்கும் ஒன்பது இந்திய மொழிகளுக்கான ஒரு ஒருங்கிணைந்த எழுத்து வடிவமாகும்.
ஒருங்கிணைக்கப்பட்ட எழுத்து வடிவங்கள் பின்வருமாறு :
Tamil
Kannada
Telugu
Malayalam
Devanagri
Bengali
Oriya
Gujarathi
Gurmukhi
ரோமன் எழுத்து வடிவமானது பல ஐரோப்பிய மொழிகளுக்கான (ஆங்கிலம், பிரெஞ்சு, ஜெர்மன், இத்தாலி போன்ற) ஒரு பொது எழுத்து வடிவமாகப் பயன்படுத்தப்படுகின்றது.
அதேபோன்று பாரதி எழுத்து வடிவமானது, ஒரு பொது எழுத்து வடிவத்துடன் இந்தியாவின் தகவல் தொடர்புத் தடைகளை ஒழிக்க எண்ணுகின்றது.
பாரதி எழுத்து வடிவத்தின் கீழ் ஆங்கிலம் மற்றும் உருது எழுத்து வடிவங்கள் ஒருங்கிணைக்கப்படவில்லை.