TNPSC Thervupettagam

பாரதீய நாகரிக் சுரக்சா சன்ஹிதா மசோதா 2023

August 17 , 2023 340 days 216 0
  • பாரதீய நாகரிக் சுரக்சா சன்ஹிதா மசோதாவில் பழைய சட்டத்தில் இருந்து பெறப்பட்டு மாற்றியமைக்கப்பட்ட 160 பிரிவுகளோடுச் சேர்த்து 533 சட்டப் பிரிவுகள் உள்ளன.
  • இந்தச் சட்டத்தில் 9 புதிய சட்டப் பிரிவுகள் சேர்க்கப்பட்டு, 9 பிரிவுகள் ரத்து செய்யப் பட்டுள்ளன.
  • குற்றம் சாட்டப்பட்டவர் அதற்கான விசாரணையில் முழுமையாகப் பங்கேற்றுத் தற்காப்பு பெறுவதற்கான ஒரு உரிமையானது சட்டமுறை செயல்முறையின் ஒரு பகுதி ஆகும்.
  • விசாரணைகள், மேல்முறையீட்டு நடவடிக்கைகள், அரசு ஊழியர்கள் மற்றும் காவல் துறை அதிகாரிகளின் வாக்குமூலங்களைப் பதிவு செய்தல் ஆகிய மின்னணு முறையில் நடத்தப்பட அனுமதிக்கப் படும் விதிமுறைகள் இதில் இடம் பெற்றுள்ளன.
  • மரணத் தண்டனை வழக்குகளில், ஒரு குற்றவாளி கருணை மனுக்களைத் தாக்கல் செய்ய அனுமதிக்கும் நடைமுறைகள் தொடர்பான ஒரு விதியும் இதில் இடம் பெற்று உள்ளது.
  • தடுப்புக் காவலின் ஒரு பகுதியாக கொடுக்கப்பட்ட சில வழிகாட்டுதல்களை எதிர்க்கும் அல்லது மறுக்கும் எந்தவொரு நபரையும் தடுப்புக் காவலில் வைக்கவும் அல்லது அதில் வெளியேற்றவும் காவல்துறைக்கு அனுமதி வழங்கும் விதிகளும் இதில் இடம் பெற்று உள்ளன.
  • மனநோயால் பாதிக்கப்பட்ட ஒருவரை தடுப்புக் காவலில் வைத்தல், காவலில் வைத்தல் போன்றவற்றிற்கான விதிமுறைகளையும் இந்த மசோதா வகுத்துள்ளது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்