திருத்தப்பட்ட செயலாக்க உத்தியின் நோக்கம் மார்ச், 2019 ஆம் ஆண்டுக்குள் அனைத்து கிராம பஞ்சாயத்துகளுக்கும் அகலக்கற்றை இணைப்பு (Broadband Connection) அளிப்பதாகும் .
இந்தத் திட்டத்தின் முதல் கட்டத்தில் நிலத்தடி ஒளியிழைகள் (OFC) பயன்படுத்தி இணையதள இணைப்பு அளிக்கப்பட்டது .
தற்போது இரண்டாம் கட்டத்தில் நிலத்தடி ஒளியிழைகள், கம்பங்கள் வழி ஒளியிழைகள், ரேடியோ அலைகள், மற்றும் செயற்கைக்கோள் வழியாக மீதமுள்ள கிராமங்களுக்கு இணையதள இணைப்பு வழங்கப்படவுள்ளது.
பாரத்நெட்
பாரத்நெட் என்பது கிராமங்களுக்கு இணைய இணைப்பு (Internet Connectivity) வழங்கும் மத்திய அரசின் திட்டம் ஆகும் . இதனை பாரத அகலக்கற்றை வலையமைப்பு நிறுவனம் (Bharat Broadband Network Limited - BBNL) செயல்படுத்தி வருகிறது.
ஒளியிழைக் கொண்டு செயல்படுத்தப்படும் உலகின் மிகப்பெரிய கிராமப்புற இணைய இணைப்புத் திட்டம் இதுவாகும்.
இந்தியாவில் உள்ள அனைத்து இல்லங்களுக்கும் , குறிப்பாக கிராமப்புற இல்லங்களுக்கு, 2 Mbps முதல் 20 Mbps வேகம் வரையிலான அகலக்கற்றை
இணைய இணைப்புகளை தேவைக்கேற்ப வழங்குவது பாரத்நெட்டின் நோக்கம் ஆகும்.
பாரத்நெட்டின் மூன்று கட்ட செயலாக்க திட்டம் பின்வருமாறு :
முதல் கட்டமாக 2017 மார்ச் மாதத்துக்குள் ஒரு லட்சம் கிராம பஞ்சாயத்துகளுக்கு நிலத்தடி ஒளியிழைகள் மூலம் இணைய இணைப்பு வழங்கப்படுதல்.
இரண்டாம் கட்டமாக 2017 மார்ச் மாதத்துக்குள் இந்தியாவில் உள்ள அனைத்து 2,50,500 கிராம பஞ்சாயத்துகளுக்கும் இணையதள இணைப்பு வழங்கப்படுதல்.
மூன்றாம் கட்டமாக, 2018 ஆம் ஆண்டு முதல் 2023 ஆண்டு வரையில் அனைத்து மாவட்டங்களையும் , தொகுதிகளையும் ஒளியிழைகள் கொண்டு இணைக்கும் வகையில் நவீன வலை அமைப்பு உருவாக்கப்படும் .