TNPSC Thervupettagam

பாரத்பே – புதிய செயலி

August 29 , 2021 1057 days 616 0
  • பாரத்பே நிறுவனமானது “12% club” எனப்படும் செயலி ஒன்றைத் தொடங்கியுள்ளது.
  • இது 12% வருடாந்திர வட்டி வீதம் வரை முதலீடு செய்யவும் மற்றும் வருமானம் ஈட்டவும் அல்லது அதே வீதத்தில் கடன் பெறவும் வாடிக்கையாளர்களுக்கு வழி வகை செய்கிறது.
  • இந்தச் செயலிக்காகவும் கடன் வழங்கு ஏற்பாடுகளுக்காகவும் வேண்டி பாரத்பே நிறுவனம் லென்டென்கிளப் (LenDenClub) என்ற ஒரு நிறுவனத்துடன் (இந்திய ரிசர்வ் வங்கியினால் அங்கீகரிக்கப்பட்ட வங்கி சாரா நிதியியல் நிறுவனம்) கைகோர்த்து உள்ளது.
  • வாடிக்கையாளர்கள் 12% Club செயலியில் கடன் வழங்குதலை தேர்வு செய்வதன் மூலம் எப்போது வேண்டுமானாலும் அதில் தங்கள் சேமிப்பை முதலீடு செய்யலாம்.
  • இது தவிர, 12% Club செயலியில் 3 மாத காலத்திற்கு ரூ.10 லட்சம் வரை பிணையற்றக் கடன்களை வாடிக்கையாளர்கள் பெற இயலும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்