TNPSC Thervupettagam

பாரத்மாலா பரியோஜனா

October 26 , 2017 2634 days 1301 0
  • நாடு முழுவதும் உள்ள பொருட்கள் மற்றும் மக்களின் பயணத்தை மேலும் மேம்படுத்துவதற்காக 83,677 கி.மீ மொத்த நீளம் கொண்ட சாலைகள், நெடுஞ்சாலைகள், பசுமைவெளி விரைவு வழிப்பாதைகள் மற்றும் பாலங்கள் 2022 க்குள் கட்டப்படும் என அரசாங்கம் அறிவித்துள்ளது.
  • இது 34,800 கி.மீ நெடுஞ்சாலையை 2022 க்குள் கட்டும் திட்டத்தைக் கொண்ட ஒரே குடையின் கீழ் உள்ள திட்டமான பாரத்மாலா பரியோஜனாவின் முதல் கட்டப் பணிகளை உள்ளடக்கியது.
  • இது சாலைப் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைகள் அமைச்சகத்தின் கீழ் இயங்கும் பல திட்டங்களின் தலைமை திட்டமாகும். இதில் தேசிய நெடுஞ்சாலை மேம்பாட்டுத் திட்டத்தின்கீழ் நிறைவுபெறாத பகுதிகளும் உட்படுத்தப்படும்.
  • இது எல்லை மற்றும் சர்வதேச இணைப்புச் சாலைகள், கடற்கரை மற்றும் துறைமுக இணைப்புச் சாலைகள், தேசியப் பெருவழித் தடங்களின் செயல்திறன் மேம்பாடுகள், பொருளாதாரத் தடங்களின் மேம்பாடு போன்ற புதிய முயற்சிகளிலும் கவனம் செலுத்துகிறது.
  • பாரத்மாலா பரியோஜனா முதல்கட்ட திட்டத்திற்கு மந்திரிசபை ஒப்புதல் அளித்துள்ளது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்