ஸ்டார்ட்-அப் நிறுவனங்களுக்கு நிதியளிப்பதற்கு அகமதாபாத்திலுள்ள இந்திய மேலாண்மை நிறுவனத்தின் (Indian Institute of Management Ahmedabad- IIMA) புத்தாக்கம், காப்பீடு மற்றும் தொழில்முனைவுத் தன்மை ஆகியவற்றிற்கான மையம், 25 மில்லியன் டாலர்கள் மதிப்பு கொண்ட பாரத் உள்சேர்ப்பு முயற்சியினை (Bharat Inclusion Initiative) தொடங்கியுள்ளது.
தொழில்முனைவோர்களுக்கு ஆதரவளிக்கவும் வணிகக் கருத்துகளை (Business Ideas) ஏற்புடைய வணிக மாதிரிகளாக (Viable Business Models) மாற்றியமைப்பதற்காகவும் புத்தாக்கம், காப்பீடு மற்றும் தொழில்முனைவுத் தன்மை ஆகியவற்றிற்கான மையம் (Center for Innovation, Incubation and Entrepreneurship - CIIE) அகமதாபாத்திலுள்ள இந்திய மேலாண்மை நிறுவனத்தில் நிறுவப்பட்டது
இந்த நிதியானது, ஸ்டார்ட்-அப் நிறுவனங்களிலுள்ள நிதியியல் உள்சேர்ப்பு, வாழ்வாதாரம், கல்வி, வேளாண்மை மற்றும் சுகாதாரம் ஆகிய துறைகளில் கவனம் செலுத்தும்.