பாரத் கடலைப் பருப்புத் திட்டத்தின் இரண்டாம் கட்டம்
October 28 , 2024 33 days 79 0
மத்திய அரசானது, ‘பாரத்’ தயாரிப்புப் பெயரின் கீழ் முழு கடலைப் பருப்பு மற்றும் மசூர் (சிவப்பு பயிறு) பருப்பை அறிமுகப்படுத்தி அதன் மானிய விலையிலான பருப்பு விநியோகத் திட்டத்தை விரிவுபடுத்தியுள்ளது.
இது பொதுமக்களுக்கு மலிவு விலையில் பருப்புகள் கிடைப்பதை உறுதி செய்யும் விதமாக கூட்டுறவு வலையமைப்புகள் மூலம் இந்தப் பருப்பு வகைகளை தள்ளுபடி விலையில் வழங்குவதை நோக்கமாகக் கொண்டுள்ளது.
பாரத் என்ற தயாரிப்புப் பெயரின் கீழ் அரிசி, மாவு மற்றும் பருப்பு போன்ற முக்கியப் பொருட்கள் மானிய விலையில் வழங்கப்படுகிறது.
நடுத்தர வர்க்கத்தின் நுகர்வோருக்கு அத்தியாவசியப் பொருட்களை மிகவும் மலிவு விலையில் வழங்குவதற்கான அரசாங்கத்தின் மிக பரந்த நோக்கத்தின் ஒரு பகுதியாக இத்திட்டம் தொடங்கப்பட்டது.
இத்திட்டத்தின் முதல் கட்டமானது 2023 ஆம் ஆண்டு அக்டோபர் மாதத்தில் தொடங்கப் பட்டது என்ற நிலையில் இதன் இரண்டாம் கட்டம் ஆனது இந்த மாதத் தொடக்கத்தில் அறிவிக்கப்பட்டது.