TNPSC Thervupettagam

பாரத் கடலைப் பருப்புத் திட்டத்தின் இரண்டாம் கட்டம்

October 28 , 2024 28 days 70 0
  • மத்திய அரசானது, ‘பாரத்’ தயாரிப்புப் பெயரின் கீழ் முழு கடலைப் பருப்பு மற்றும் மசூர் (சிவப்பு பயிறு) பருப்பை அறிமுகப்படுத்தி அதன் மானிய விலையிலான பருப்பு விநியோகத் திட்டத்தை விரிவுபடுத்தியுள்ளது.
  • இது பொதுமக்களுக்கு மலிவு விலையில் பருப்புகள் கிடைப்பதை உறுதி செய்யும் விதமாக கூட்டுறவு வலையமைப்புகள் மூலம் இந்தப் பருப்பு வகைகளை தள்ளுபடி விலையில் வழங்குவதை நோக்கமாகக் கொண்டுள்ளது.
  • பாரத் என்ற தயாரிப்புப் பெயரின் கீழ் அரிசி, மாவு மற்றும் பருப்பு போன்ற முக்கியப் பொருட்கள் மானிய விலையில் வழங்கப்படுகிறது.
  • நடுத்தர வர்க்கத்தின் நுகர்வோருக்கு அத்தியாவசியப் பொருட்களை மிகவும் மலிவு விலையில் வழங்குவதற்கான அரசாங்கத்தின் மிக பரந்த நோக்கத்தின் ஒரு பகுதியாக இத்திட்டம் தொடங்கப்பட்டது.
  • இத்திட்டத்தின் முதல் கட்டமானது 2023 ஆம் ஆண்டு அக்டோபர் மாதத்தில் தொடங்கப் பட்டது என்ற நிலையில் இதன் இரண்டாம் கட்டம் ஆனது இந்த மாதத் தொடக்கத்தில் அறிவிக்கப்பட்டது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்