TNPSC Thervupettagam

பாரத் கீ வீர்

January 21 , 2018 2502 days 783 0
  • நாட்டிற்காக பணியாற்றி இன்னுயிர் ஈந்த ஆயுதக் காவற் படையினைச் சேர்ந்த (Central Armed Police force) தியாகிகளின் குடும்பத்திற்கு உதவி புரிவதற்காக யார் வேண்டுமாயினும் நிதியியல் பங்களிப்பை வழங்கிடும் வண்ணம்  ஏற்படுத்தப்பட்டுள்ள ஆன்லைன் இணைய வாயிலே “பாரத் கீ வீர்“(Bharat ke Veer) ஆகும்.
  • இந்த இணைவாயிலின் வழியே ஒருவர் மத்திய ஆயுதக் காவற்படையைச் சேர்ந்த தியாகிகளின் தனிப்பட்ட வங்கிக் கணக்கிற்கு 15 லட்சம் வரை நேரடியாகவோ அல்லது பாரத் கீ வீர் தொகுப்பு நிதியத்திற்கோ (Bharat Ke Veer Corpus Fund) நன்கொடை வழங்கலாம்.
  • மூத்த அரசு அதிகாரிகள் மற்றும் நன்மதிப்புடைய புகழ்பெற்ற நபர்களை சம எண்ணிக்கையில் கொண்டு ஏற்படுத்தப்பட்ட குழுவால் இந்த பாரத் கீ வீர் தொகுப்பு நிதியம் நிர்வகிக்கப்படும்.
  • இக்குழுவானது வீர மரணம் எய்திய ஆயுதப்படை வீரர்களின் குடும்பங்களினுடைய தேவைகளின் அடிப்படையில் தொகுப்பு நிதியிலிருந்து நிதியை சமமாக பகிர்ந்தளிப்பது தொடர்பாக முடிவு எடுக்கும்.
  • மத்திய ஆயுதக் காவற் படையானது அஸ்ஸாம் ரைபிள்ஸ் (Assam Rifles – AC), எல்லைப் பாதுகாப்பு படை (Border Security Force - BSF), தேசிய பாதுகாப்புப் படை (National Security Guards – NSG), மத்திய தொழிற்துறை பாதுகாப்புப் படை (Central Industrial Security Force – CISF), மத்திய ரிசர்வ் காவற்படை (Central Reserve Police Force – CRPF), இந்தோ-திபெத்திய காவற்படை (Indo-Tibetan Border Police Force – ITBT), தேசிய பேரிடர் பதிலெதிர்ப்பு படை (National Disaster Response Force – NDRF), சாஷஸ்திரா சீமா பால் (Sashastra Seema Bal – SSB) போன்ற பல்வேறு படைகளை உள்ளடக்கியதாகும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்