SBI ஈகோராப் எனப்படும் பாரத ஸ்டேட் வங்கியின் பொருளாதார ஆராய்ச்சித் துறையின் அறிக்கையானது, 2028 ஆம் நிதியாண்டிற்குள் உலகின் மூன்றாவது பெரிய பொருளாதாரம் என்ற ஒரு அடையாளத்தை இந்தியா பெற வாய்ப்புள்ளது என்று கூறி உள்ளது.
தற்போதைய வளர்ச்சி விகிதத்தின் படி, 2027 ஆம் ஆண்டில் ஜப்பான் மற்றும் ஜெர்மனி ஆகிய இரு நாடுகளையும் இந்தியா விஞ்ச வேண்டும்.
2022-2027 ஆகிய ஆண்டுகளுக்கு இடையில் இந்தியாவில் பதிவாகி வரும் பொருளாதார வளர்ச்சி ஆனது, ஆஸ்திரேலியாவின் பொருளாதாரத்தின் தற்போதைய அளவை விட 1.8 டிரில்லியன் டாலர் அதிகமாகும்.
ஒவ்வொரு 2 வருடங்களுக்கும், இந்தியாவானது தனது பொருளாதார மதிப்பீட்டில் 0.75 டிரில்லியன் டாலர் வளர்ச்சியினை சேர்க்கும் வாய்ப்பு உள்ளது.
2047 ஆம் ஆண்டிற்குள் இந்தியா 20 டிரில்லியன் டாலர் மதிப்பினை எட்டும் என்பதை இது குறிக்கிறது.
மகாராஷ்டிரா மற்றும் உத்தரப் பிரதேசம் ஆகிய மாநிலங்கள் 2027 ஆம் ஆண்டில் (அல்லது 2028 ஆம் நிதியாண்டில்) 500 பில்லியன் டாலர் மதிப்பினை எட்டும்.