முன்னாள் பிரதமர்கள் P.V. நரசிம்மராவ் மற்றும் செளத்ரி சரண் சிங், வேளாண் அறிவியலாளர் M.S. சுவாமிநாதன் ஆகியோருக்கு பாரத ரத்னா விருது வழங்கப்பட வுள்ளது.
முன்னதாக, பீகார் முன்னாள் முதல்வர் கர்பூரி தாக்கூர், முன்னாள் துணைப் பிரதமர் லால் கிருஷ்ண அத்வானி ஆகியோருக்கு இந்தியாவின் உயரியக் குடிமை விருது வழங்கப்பட உள்ளதாக அறிவிக்கப்பட்டது.
இந்த ஆண்டு வழங்கப்பட உள்ள ஐந்து விருதுகள் ஆனது 1999 ஆம் ஆண்டில் ஒரே ஆண்டில் வழங்கப்பட்ட நான்கு விருதுகள் என்ற எண்ணிக்கையினை ஓராண்டில் அதிக எண்ணிக்கையில் வழங்கப்பட்ட பாரத ரத்னா விருதுகள் என்ற வகையில் விஞ்சி உள்ளது.
அத்வானி அவர்கள் 1999 முதல் 2004 ஆம் ஆண்டு வரை அடல் பிஹாரி வாஜ்பாய் அவர்கள் தலைமையில் உள்துறை அமைச்சராகவும், துணைப் பிரதமராகவும் பணியாற்றியுள்ளார்.
தெலுங்கு தலைவர் P.V. நரசிம்ம ராவ் அவர்கள், 1991 முதல் 1996 ஆம் ஆண்டு வரை ஐந்தாண்டுகள் பிரதமராக பதவி வகித்தார்.
பொருளாதாரச் சீர்திருத்தங்களை அறிமுகப்படுத்துவதில் அவர் முக்கியப் பங்கு வகித்ததற்காக பெருமளவில் புகழப்படுகிறார்.
மான்கொம்பு சாம்பசிவன் சுவாமிநாதன் அவர்கள், வேளாண்மை மற்றும் விவசாயிகளின் நலனில் குறிப்பிடத்தக்கப் பங்களிப்பிற்காக புகழ் பெற்றவர் ஆவார்.