சுற்றுலா அமைச்சகமானது கலாச்சார அமைச்சகம் மற்றும் இந்தியத் தொல்லியல் துறை ஆகியவற்றுடன் பாரம்பரியத்தை ஏற்றுக்கொள்ளல் என்ற திட்டத்தை ஆரம்பித்துள்ளது.
இத்திட்டத்தின் கீழ் தேர்ந்தெடுக்கப்பட்ட பொதுத்துறை நிறுவனங்கள், தனியார் துறை நிறுவனங்கள் மற்றும் தனிநபர்கள் பாரம்பரியத் தளங்களில் சுற்றுலா வசதிகளை ஏற்படுத்துவர்.
மோனுமென்ட் மித்ரா (Monument Mitra) என அழைக்கப்படும் இவை அந்நிறுவனங்களின் பெருநிறுவன சமூகப் பொறுப்புடைமை செயல்பாட்டின் கீழ் அப்பகுதிகளை ஏற்கின்றன.