TNPSC Thervupettagam

பாரம்பரியப் பல்லுயிர்ப் பெருக்கத் தளம் – மகாராஷ்டிரா

April 6 , 2021 1204 days 710 0
  • மகாராஷ்டிர மாநில அரசானது சிந்துதுர்க் மாவட்டத்திலுள்ள மேற்குத் தொடர்ச்சி மலையில் அம்போலி எனும் பகுதியைப் பல்லுயிர்ப் பெருக்க பாரம்பரியத் தளமாக அறிவித்து உள்ளது.
  • அரிதான நன்னீர் மீன் இனங்கள் இங்கு கண்டு பிடிக்கப்பட்டுள்ளன.
  • ஸ்கிஸ்துரா ஹிரண்யகேஷி (Schistura Hiranyakeshi) எனப் பெயரிடப்பட்ட ஒரு புதிய நன்னீர் மீன் இனத்தினை தேஜாஸ் தாக்கரே மற்றும் அவரது குழு கண்டுபிடித்துள்ளது.
  • தேஜாஸ் தாக்கரே முதலமைச்சர் உத்தவ் தாக்கரேயின் மகனாவார்.
  • இந்த மீன்கள் சிந்துதுர்க் மாவட்டத்தின் சவந்த்வாடி தாலுக்காவிலுள்ள அம்போலியின் அருகே காணப் படுகின்றன.
  • ஸ்கிஸ்துரா மீன் ஆக்சிஜன் நிறைந்த நீர்நிலைகள் மற்றும் ஓடைகளில் வாழும் ஒரு சிறிய வண்ண மயமான மீனாகும்.
  • இதற்கு முன்பு அந்த மாநில அரசு,
    • அல்லப்பள்ளியின் மகிமை – கட்சிரோலி மாவட்டம்
    • லன்டோர் கோரி பூங்கா – ஜல்காவோன்
    • கணேஷ் கிந்த் – பூனா
    • மைரிஸ்டிகா சதுப்புநிலத் தாவரங்கள் – சிந்துதுர்க் மாவட்டம்
  • ஆகியவற்றைப் பாரம்பரிய பல்லுயிர்ப் பெருக்கத் தளங்களாக அறிவித்துள்ளது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்