ஒடிசா மாநில அரசானது தனித்துவமான ‘பாரம்பரிய அமைச்சரவை’ மற்றும் ‘ஒடியா மொழி ஆணையம்’ ஆகியவற்றை அமைக்க முடிவு செய்துள்ளது. அம்மாநிலத்தில் உள்ள வாழிடங்கள் மற்றும் நினைவுச் சின்னங்களைப் பாதுகாக்கவும் அம்மாநிலத்தினுடைய உயர்ந்த கலாச்சாரம் மற்றும் மொழியை வளப்படுத்தவும் இம்முடிவை அம்மாநில அரசு எடுத்துள்ளது.
ஒடிசா மாநில அரசின் அமைச்சரவைக் கூட்டமானது புவனேஷ்வரில் நடைபெறுவதற்கு மாற்றாக முதன்முறையாக பூரியில் (Puri) நடைபெற்றபோது இம்முடிவு எடுக்கப்பட்டது.
அம்மாநிலத்தில் உள்ள கடைகள் மற்றும் வணிக வளாகங்களின் விளம்பரப் பலகைகளை குறிப்பிட்ட காலத்திற்குள் ஒடியா மொழியில் காட்சிப்படுத்துவது கட்டாயம் என்று அறிவித்துள்ளது.
ஒவ்வொரு ஐந்து ஆண்டுகளுக்கு ஒருமுறை உலக ஒடியா மொழி மாநாடு நடத்தப்படும்.
ஒடிசாவில் சமய நூல்களை மக்களுக்கு விவரிக்கும் இடமான கிராமங்களில் உள்ள சிறிய குடிசைகளான ‘பாகபத் துங்கிஸ்’- ஐ பிரபலப்படுத்த மற்றும் மறுமலர்ச்சியை ஏற்படுத்த மானியம் அளிக்கப்படுகிறது.