TNPSC Thervupettagam

பாரம்பரிய இசைக் கருவி - கோவா

February 21 , 2019 1977 days 597 0
  • கோவா மாநிலத்தின் பாரம்பரிய இசைக் கருவியாக “குமோட்” என்ற கருவியை கோவா மாநில அரசு விரைவில் அறிவிக்கவிருப்பதாக கோவாவின் கலை மற்றும் கலாச்சாரத் துறை அமைச்சர் அறிவித்துள்ளார்.
  • குமோட் என்பது ஒரு உள்நாட்டு மண் பானை ஆகும்.
  • குமோட் என்பது விநாயகச் சதுர்த்தி திருவிழாவின் போது பரவலாக இசைக்கப்படும் ஒரு வகை தட்டும் கருவியாகும்.
  • உடும்பின் தோலைப் பயன்படுத்தி இந்தக் கருவி தயாரிக்கப்படுவதால் வனத் துறை இந்தக் கருவியைத் தடை செய்துள்ளது. உடும்பு என்பது அழிந்துபோகும் உயர் அபாயத்திலுள்ள வகை உயிரினங்கள் என்பதால் வனவிலங்குப் பாதுகாப்புச் சட்டம் 1972-ன் அட்டவணை 1-ல் அது பட்டியலிடப்பட்டுள்ளது.
  • ஆந்திரப் பிரதேசத்தில் இந்தப் பானை “கும்மேட்டா” என்று அழைக்கப்படுகிறது. இது நாட்டுப்புறக் கதை சொல்லுதலின் போது இசைக்கப்படுகிறது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்