TNPSC Thervupettagam

பாரம்பரிய மருத்துவம் - பிம்ஸ்டெக் செயற்படை மாநாடு

October 27 , 2017 2584 days 866 0
  • இந்திய அரசின் ஆயுஷ் அமைச்சகம், பிம்ஸ்டெக்கின் பாரம்பரிய மருத்துவச் செயற்படையின் முதல் மாநாட்டை புதுடெல்லியில் உள்ள பிரவாசி பாரதீய கேந்திராவில் நடத்தியது.
  • பாரம்பரிய மருத்துவத் துறையில் இந்தியாவின் பங்களிப்பு முக்கியமானது ஆகும். பிம்ஸ்டெக்கின் பாரம்பரிய மருத்துவத்திற்கான குழுவில், கொள்கைகள் மற்றும்  தொழில்நுட்பங்கள் தொடர்பான முக்கிய முடிவுகளில் இந்தியா இன்றியமையாத பங்கினை வகிக்கின்றது.
பிம்ஸ்டெக் (BIMSTEC)
  • பிம்ஸ்டெக் (BIMSTEC – Bay of Bengal Initiatives for Multi-Sectoral Technical and Economic Cooperation) என்ற துணைப் பிராந்தியக் குழுவானது தெற்கு ஆசியா மற்றும் தென் கிழக்கு ஆசியாவின் ஏழு நாடுகளை உள்ளடக்கியது. (அந்நாடுகள்: பங்களாதேஷ், இந்தியா, மியான்மர், இலங்கை, தாய்லாந்து, பூடான் மற்றும் நேபாளம்).
  • 1997 ஆம் ஆண்டு ஜூன் 6 ஆம் தேதி பாங்காக்கில் பிஸ்டெக் (BIST-EC என்ற பங்களாதேஷ், இந்தியா, இலங்கை மற்றும் தாய்லாந்து நாடுகளின் பொருளாதாரக் கூட்டிணைவு) என்கிற புதிய துணைப் பிராந்தியக் குழு தொடங்கப்பெற்றது. பின்னர் இதில் மியான்மரும், நேபாளமும் இணைந்து பிம்ஸ்டெக் என்று ஆயிற்று.
  • இந்த பிம்ஸ்டெக் (BIMSTEC) அமைப்பிற்கு நேபாளம் தற்போது தலைமை வகிக்கிறது. இதன் செயலகம் டாக்காவில் அமைந்திருக்கிறது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்