TNPSC Thervupettagam

பாராட்டு சான்றிழ்

December 3 , 2017 2420 days 819 0
  • வன விலங்குகள் மற்றும் தாவரங்களின் அருகி வரும் இனங்கள் மீதான சர்வதேச வர்த்தக உடன்படிக்கைக்கான (CITES – Convention on International Trade in Endangered species of with Fauna and Flora) அமைப்பானது  வனஉயிரிகளின் சட்ட விரோத வர்த்தகத்தை தடுப்பதில் இந்தியா மேற்கொண்ட முயற்சிகளை பாராட்டும் வகையில் இந்தியாவிற்கு பாராட்டு சான்றிதழை (Certificate of Commendation) வழங்கியுள்ளது.
  • “ஆப்ரேஷன் சேவ் குர்மா“ என (Operation Save Kurma) குறியீட்டு பெயருடைய குறிப்பிட்ட வன உயிர் இனத்திற்கான பாதுகாப்பு செயற் நடவடிக்கையை ஒருங்கிணைத்து மேற்கொண்டமைக்காக வனஉயிர்கள் மீதான குற்றங்கள் தடுப்பு அமைப்பிற்கு (Wildlife Crime Control Bureau - WCCB) இச்சான்று அளிக்கப்பட்டுள்ளது.
  • WCCB-ன் வனஉயிர்களின் சட்டவிரோத வர்த்தகத்தை தடுப்பதற்கான உலகளாவிய மற்றும் பிராந்திய அளவிலான முன்மாதிரி செயற் நடவடிக்கைகளை அங்கீகரித்து இந்த பாராட்டு சான்றிதழ் வழங்கப்பட்டுள்ளது.
  • அண்மையில் ஜெனிவாவில் நடைபெற்ற CITESன் 69வது நிலைக் குழு மாநாட்டில் இப்பாராட்டு சான்றிதழை உலக அளவில் இந்தியா மட்டுமே பெற்றுள்ளது.
ஆப்ரேஷன் சேவ் குர்மா
  • வெளிநாடுகளுக்கு இந்தியாவிலிருந்து உயிருள்ள ஆமைகள் மற்றும் அவற்றின் உறுப்புகள் சட்ட விரோதமாக வர்த்தகம் செய்யப்படுவதை தடுப்பதற்காக “ஆப்ரேஷன் சேவ் குர்மா“ மேற்கொள்ளப்பட்டது.
WCCB
  • வனவிலங்குகள் பாதுகாப்புச் சட்டம் 1972 –ல் (Wildlife Protection Act-1972) 2007  ஆம் ஆண்டு மேற்கொள்ளப்பட்ட திருத்தத்தின்  கீழ் உருவாக்கப்பட்ட   ஓர் சட்ட அமைப்பே WCCB ஆகும்.
  • நாட்டிலுள்ள வனவிலங்குகள் தொடர்புடைய குற்றங்களை தடுப்பதற்காக இது ஏற்படுத்தப்பட்டது.
 

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்