மேலே கூறப்பட்ட இந்த உயிரினமானது 66 மில்லியன் ஆண்டுகள் முதல் 145 மில்லியன் ஆண்டுகளுக்கு முன்பு ஆசியாவின் கரையோரப் பகுதிகளில் வாழ்ந்ததாக ஒரு புதிய ஆய்வில் தெரிய வந்துள்ளது.
இது இரு கால்கள் கொண்ட ஒரு டைனோசர் இனமாகும்.
ஜப்பானின் வடக்குத் தீவான ஹொக்கைடோவில் கண்டுபிடிக்கப்பட்டப் புதை படிவங்களிலிருந்து இது அடையாளம் காணப்பட்டது.
ஆசியாவில் முதன்முறையாக கடல் படிவுகளில் இருந்து கண்டறியப்பட்ட முதல் புதை படிவம் இதுவாகும்.
இரு கால் மற்றும் முதன்மையாக தாவரங்களை உண்ணுகின்ற மூன்று விரல்கள் கொண்ட இந்த டைனோசர்கள் தெரிசினோசர்கள் எனப்படும் ஒரு குழுவைச் சேர்ந்தவையாகும்.
இந்த இனத்தின் மிகவும் ஒரு குறிப்பிடத்தக்க அம்சம் என்னவென்றால், இவை வாள் போன்ற நகங்களைக் கொண்டிருந்தன என்பதேயாகும்.