TNPSC Thervupettagam

பாராளுமன்ற கூட்டுக் குழு 2024 - ஒரே நாடு ஒரே தேர்தல்

December 22 , 2024 8 hrs 0 min 28 0
  • மக்களவை மற்றும் சட்டசபைகளுக்கு தேர்தல்களை ஒரே நேரத்தில் நடத்துவதற்கான அரசியலமைப்பு திருத்த வரைவு மசோதாக்களை பாராளுமன்றக் கூட்டுக் குழுவின் மதிப்பாய்விற்கு (JPC) பரிந்துரைப்பதற்கான ஒரு தீர்மானத்தினை மக்களவை ஏற்றுக் கொண்டுள்ளது.
  • இந்த JPC குழுவானது, மக்களவையில் இருந்து 27 மற்றும் மாநிலங்களவையில் இருந்து 12 உறுப்பினர்களுடன் என மொத்தம் 39 உறுப்பினர்களைக் கொண்டிருக்கும்.
  • இது பாஜக பாராளுமன்ற உறுப்பினரான PP சௌத்ரியால் தலைமை தாங்கப் படும்.
  • ஒரு விவகாரம் அல்லது மசோதாவின் மீதான விரிவான ஆய்வு போன்ற ஒரு சிறப்பு நோக்கத்திற்காக பாராளுமன்றத்தினால் ஒரு கூட்டுப் பாராளுமன்றக் குழு அமைக்கப் படுகிறது.
  • பெயருக்கு ஏற்றாற்போல், இது இரு அவைகளின் உறுப்பினர்களையும், ஆளும் கட்சி மற்றும் எதிர்க்கட்சி உறுப்பினர்களையும் கொண்டுள்ளது.
  • அதன் பதவிக்காலம் முடிவடைந்ததும் அல்லது அதன் பணி முடிந்ததும் அது உடனே கலைக்கப் படுகிறது.
  • ஆனாலும் அரசாங்கம் இக்குழுவின் பரிந்துரைகளுக்குக் கட்டுப்பட்டதல்ல.
  • இக்குழு வழங்கிய மதிப்பீடுகளின் அடிப்படையில் அரசாங்கமானது மேற்கொண்டு பரிசீலனைகளைத் தொடங்கலாம், ஆனால் அவ்வாறு செய்ய இந்தக் குழு அரசினைக் கட்டாயப்படுத்த முடியாது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்