பாராளுமன்ற கூட்டுக் குழு 2024 - ஒரே நாடு ஒரே தேர்தல்
December 22 , 2024 5 days 69 0
மக்களவை மற்றும் சட்டசபைகளுக்கு தேர்தல்களை ஒரே நேரத்தில் நடத்துவதற்கான அரசியலமைப்பு திருத்த வரைவு மசோதாக்களை பாராளுமன்றக் கூட்டுக் குழுவின் மதிப்பாய்விற்கு (JPC) பரிந்துரைப்பதற்கான ஒரு தீர்மானத்தினை மக்களவை ஏற்றுக் கொண்டுள்ளது.
இந்த JPC குழுவானது, மக்களவையில் இருந்து 27 மற்றும் மாநிலங்களவையில் இருந்து 12 உறுப்பினர்களுடன் என மொத்தம் 39 உறுப்பினர்களைக் கொண்டிருக்கும்.
இது பாஜக பாராளுமன்ற உறுப்பினரான PP சௌத்ரியால் தலைமை தாங்கப் படும்.
ஒரு விவகாரம் அல்லது மசோதாவின் மீதான விரிவான ஆய்வு போன்ற ஒரு சிறப்பு நோக்கத்திற்காக பாராளுமன்றத்தினால் ஒரு கூட்டுப் பாராளுமன்றக் குழு அமைக்கப் படுகிறது.
பெயருக்கு ஏற்றாற்போல், இது இரு அவைகளின் உறுப்பினர்களையும், ஆளும் கட்சி மற்றும் எதிர்க்கட்சி உறுப்பினர்களையும் கொண்டுள்ளது.
அதன் பதவிக்காலம் முடிவடைந்ததும் அல்லது அதன் பணி முடிந்ததும் அது உடனே கலைக்கப் படுகிறது.
ஆனாலும் அரசாங்கம் இக்குழுவின் பரிந்துரைகளுக்குக் கட்டுப்பட்டதல்ல.
இக்குழு வழங்கிய மதிப்பீடுகளின் அடிப்படையில் அரசாங்கமானது மேற்கொண்டு பரிசீலனைகளைத் தொடங்கலாம், ஆனால் அவ்வாறு செய்ய இந்தக் குழு அரசினைக் கட்டாயப்படுத்த முடியாது.