தென் கொரியாவின் உல்சான் நகரில் நடைபெற்ற உலக பாட்மின்டன் சம்மேளனத்தின் (Badminton World Federation) பாரா – பாட்மின்டன் உலக சாம்பியன் ஷிப் போட்டியில் இரு தங்கம் உட்பட மொத்தம் 10 பதக்கங்களை இந்தியா வென்றுள்ளது.
பெண்களுக்கான ஒற்றையர் Standing Lower (SL-3) பிரிவின் இறுதிப்போட்டியில் தாய்லாந்து வீராங்கனையை வீழ்த்தி இந்திய வீராங்கனை பருல் பர்மார் தங்கம் வென்றுள்ளார்.
இரட்டையர் பிரிவில் இந்திய வீராங்கனை பருல் பர்மார் ஜப்பானின் அகிகோ சுகினோவுடன் சேர்ந்து சீன இரட்டையர் அணியை வீழ்த்தி தங்கம் வென்றுள்ளார்.
ஆண்கள் ஒற்றையர் பிரிவில் இந்திய வீரர்கள் தருண் தில்லான் மற்றும் மனோஜ் சங்கர் முறையே SL4 மற்றும் SL3 பிரிவில் வெள்ளி வென்றுள்ளனர்.