மூன்றாவது செயற்கை நுண்ணறிவு நடவடிக்கை மீதான ஒரு உச்சி மாநாடானது பிரான்சின் பாரிசு நகரில் நடைபெற்றது.
மேலும் இந்தியப் பிரதமர் இந்த பாரிசு உச்சி மாநாட்டில் அதன் இணைத் தலைவராகப் பங்கேற்றார்.
பொதுச் சேவை செயற்கை நுண்ணறிவு, எதிர்காலத்தில் வேலைவாய்ப்புகள், புதுமை மற்றும் கலாச்சாரம், செயற்கை நுண்ணறிவு மீதான நம்பிக்கை மற்றும் செயற்கை நுண்ணறிவின் உலகளாவிய ஆளுகை உள்ளிட்ட ஐந்து முக்கியக் கருத்துருவில் இந்த உச்சி மாநாடு கவனம் செலுத்தியது.
2023 ஆம் ஆண்டில் ஐக்கியப் பேரரசில் நடைபெற்ற இதற்கு இரண்டு முந்தைய மாநாடுகளுடன், செயற்கை நுண்ணறிவு ஆளுகை தொடர்பான உலகளாவிய பேச்சு வார்த்தைகளின் தொடரில் இது சமீபத்திய மாநாடாகும்.
இந்த உச்சிமாநாட்டின் போது, இரண்டாவது இந்தியா-பிரான்சு நாடுகளின் செயற்கை நுண்ணறிவு கொள்கை மீதான ஒரு வட்டமேசை மாநாடும் ஓர் இணை நிகழ்வாகத் திட்டமிடப்பட்டது.