TNPSC Thervupettagam

பாரீஸ் ஒலிம்பிக் போட்டிகள் 2024

November 23 , 2022 732 days 640 0
  • 2024 ஆம் ஆண்டிற்கான பாரீஸ் ஒலிம்பிக் போட்டிகளுக்கான சின்னமாக ஃபிரிஜியன் தொப்பி அறிவிக்கப்பட்டது.
  • பிரஞ்சுக் குடியரசின் சின்னமாக விளங்கிய இது நிகழ்காலத்திற்கு ஏற்ப காலணிகளை அணிந்துள்ளவாறு சித்தரிக்கப்பட்டுள்ளது.
  • ஒலிம்பிக் ஃபிரிஜியன் அளவில் சற்று சிறியது.
  • மாற்றுத் திறனாளிகளுக்கான ஒலிம்பிக் போட்டியின் ஃபிரிஜியன் சற்று மெலிதானது ஆகும்.
  • இது ஒரு மாற்றுத் திறனாளிகளுக்கான ஃபிரிஜியன் என்பதைக் குறிக்கும் வகையில் அதன் வலது காலில் ஒரு தட்டு போன்ற அமைப்பு பொறுத்தப்பட்டுள்ளது போல் உள்ளது.
  • மாற்றுத் திறனாளிகளுக்கான ஒலிம்பிக் போட்டியின் சின்னம் எவ்வாறு வேறுபட்டது என்றால் அதன் கால்களில் ஒன்று மாற்றுத் திறனாளி தடகள வீரரின் காலினை ஒத்தது ஆகும்.
  • ஃபிரிஜியன் ஒரு பெரிய குழுவின் ஒரு பகுதியாக இருந்தாலும், 2024 ஆம் ஆண்டு பாரீஸ் ஒலிம்பிக் போட்டிகளின் முக்கிய நாயகர்கள் ஒலிம்பிக் ஃபிரிஜியன் மற்றும் மாற்றுத் திறனாளிகளுக்கான ஒலிம்பிக் போட்டியின் ஃபிரிஜியன் ஆகும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்