பாரீஸ் ஒலிம்பிக் போட்டிக்கான ஷெங்கன் நுழைவு இசைவுச் சீட்டுக்கள்
January 7 , 2024 323 days 211 0
வரவிருக்கும் பாரீஸ் ஒலிம்பிக் போட்டியின் பார்வையாளர்களுக்கு எண்ணிம ஷெங்கன் நுழைவு இசைவுச் சீட்டுக்களை வழங்கும் முதல் ஐரோப்பிய நாடாக பிரான்சு மாற உள்ளது.
70,0000 பிரெஞ்சு ஷெங்கன் நுழைவு இசைவுச் சீட்டுகளுக்காக முற்றிலும் இயங்கலை நடைமுறைகளுக்கு மாறுவதற்கான திட்டங்களை பிரான்சு அறிவித்துள்ளது.
கடந்த ஆண்டு, ஐரோப்பிய ஒன்றியம் ஷெங்கன் நுழைவு இசைவுச் சீட்டுகளை எண்ணிம மயமாக்கும் திட்டத்தை அறிவித்தது.
ஷெங்கன் பகுதியில் 27 ஐரோப்பிய ஒன்றிய உறுப்பினர் நாடுகளில் 23 நாடுகளும், அண்டை நாடுகளான சுவிட்சர்லாந்து, நார்வே, ஐஸ்லாந்து மற்றும் லிச்சென்ஸ்டைன் ஆகியவை அடங்கும்.