மியான்மரின் அரசியல் தலைவரான ஆங் சான் சூ கீக்கு பாரீஸ் நகர மேயரான அன்னி ஹிடால்கோவால் அளிக்கப்பட்டிருந்த பாரீஸ் சுதந்திர விருது (Freedom of Paris Award) பறிக்கப்பட்டது.
இந்த நடவடிக்கையானது ரோஹிங்கியா என்ற சிறுபான்மையினரின் விவகாரம் குறித்து சூ கியின் அரசு நடவடிக்கை எடுக்க தவறியதன் காரணமாக எடுக்கப்பட்டது.
இது சூ கியை பிரெஞ்சுத் தலைநகரில் சுதந்திரத்தை இழந்த முதல் நபராக மாற்றியுள்ளது.
ஏற்கனவே கனடாவின் கௌரவக் குடியுரிமை மற்றும் அவரது அம்னஸ்டி இன்டர்நேஷனலின் மனசாட்சிக்கான தூதுவர் விருது ஆகியவையும் இவரிடம் இருந்து பறிக்கப்பட்டு விட்டன.