லடாக்கில் உள்ள இமயமலைப் பார்காச்சிக் பனிப்பாறை வேகமாக உருகுவதால் மூன்று பனிப்பாறை ஏரிகள் உருவாகலாம் என்று கணிக்கப் பட்டுள்ளது.
அவை சராசரியாக 34 முதல் 84 மீட்டர் வரையிலான ஆழம் கொண்டதாக இருக்கலாம்.
இந்த ஏரிகள் இமயமலையில் பனிப்பாறை ஏரி உடைப்பினால் ஏற்படும் ஒரு பெரு வெள்ளத்திற்கான சாத்தியமான மூல ஆதாரமாக இருக்கக் கூடும்.
இந்த ஒவ்வொரு ஏரியின் பரப்பளவு 43 முதல் 270 ஹெக்டேர் வரை இருக்கக் கூடும்.
பனிப்பாறையின் வருடாந்திர உருகும் விகிதம் ஆனது 1971 முதல் 1999 வரையில் (28 ஆண்டுகள்) கணக்கிடப் பட்டதை விட, 1999 மற்றும் 2021 (22 ஆண்டுகள்) ஆகிய ஆண்டுகளுக்கு இடையே 6 மடங்கு வேகமாக இருந்தது.
பனிக்கட்டி உருகுவதன் அளவானது சராசரியாக ஆண்டிற்கு சுமார் 12 மீட்டர் என்ற விகிதத்தில் இருந்தது.
பார்காச்சிக் பனிப்பாறையானது, சுரு நதி பள்ளத்தாக்கில் உள்ள மிகப் பெரியப் பனிப் பாறைகளில் ஒன்றாகும்.
இது மேற்கு இமயமலையின் தெற்கு சான்ஸ்கர் மலைத் தொடரின் ஒரு பகுதியாகும்.
இமயமலையின் ஒரு பகுதியான சான்ஸ்கர் மலைத் தொடர் ஆனது லடாக் ஒன்றியப் பிரதேசத்தில் அமைந்துள்ளது.