பார்ச்சூன் இதழின் உலகின் 500 முன்னணி நிறுவனங்கள் பட்டியல் 2023
August 12 , 2023 470 days 367 0
பார்ச்சூன் இதழானது உலகின் 500 முன்னணி நிறுவனங்களின் பட்டியலை வெளியிட்டு உள்ளது.
இது 2023 ஆம் ஆண்டு மார்ச் 31 ஆம் தேதியன்று அல்லது அதற்கு முன்னதாக முடிவடைந்த அந்தந்த நிறுவனங்களின் நிதியாண்டுகளுக்கான மொத்த வருவாயின் அடிப்படையில் நிறுவனங்களை வரிசைப்படுத்துகிறது.
2010 ஆம் ஆண்டு முதல் அமெரிக்கா இந்தப் பட்டியலில் இடம் பெற்ற அதிகபட்ச நிறுவன எண்ணிக்கையினைக் கொண்டுள்ளதோடு, 2023 ஆம் ஆண்டில் ஒரு முன்னணி நாடாகத் திகழ்கிறது.
வால்மார்ட் நிறுவனம் தொடர்ந்து 11வது ஆண்டாக வருவாய் மதிப்பில் மிகப்பெரிய நிறுவனமாகப் பட்டியலிடப் பட்டுள்ளது.
சவுதியின் அராம்கோ நிறுவனம் 2வது இடத்திலும், ஸ்டேட் கிரிட் நிறுவனம் (சீனா) 3வது இடத்திலும் உள்ளது.
எட்டு இந்திய நிறுவனங்கள் இப்பட்டியலில் இடம் பெற்றுள்ளன.
2022 ஆம் ஆண்டு தரவரிசையில் ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் நிறுவனம் 104வது இடத்தில் இருந்தது.
மேலும் 2023 ஆம் ஆண்டு தரவரிசையில் இது 88வது இடத்தினைப் பெற்றது.
இதில் அரசுக்குச் சொந்தமான இந்தியன் எண்ணெய் உற்பத்திக் கழகம் 48 இடங்கள் முன்னேறி 94வது இடத்தைப் பெற்றுள்ளது.
இதற்கிடையில், இந்திய ஆயுள் காப்பீட்டுக் கழகம் ஒன்பது இடங்கள் சரிந்து 107வது இடத்தைப் பிடித்துள்ளது.