உலகளவில் பெண் முன்மாதிரியாளர்களை கௌரவிப்பதற்காக புதிய வகை பொம்மைகளை பார்பி பொம்மை தயாரிக்கும் நிறுவனமான மேட்டல் நிறுவனம் வெளியிட்டுள்ளது. இந்நிறுவனம் தனது 60-வது ஆண்டின் நினைவாக இந்த வகை பொம்மைகளை வெளியிட்டுள்ளது.
இந்தியாவின் பிரதிநிதியான தீபா கர்மாகருடன் இந்தியா இந்த மாதிரி பொம்மை தயாரிப்புகளில் பங்கு பெற்றுள்ளது.
தீபா கர்மாகர் மாநில, தேசிய மற்றும் சர்வதேச அளவிலான போட்டிகளில் 67 தங்கப் பதக்கங்கள் உள்பட 77 பதக்கங்களை வென்றுள்ளார்.
இவருக்கு 2015 ஆம் ஆண்டில் அர்ஜீனா விருதும் 2016 ஆம் ஆண்டில் ராஜீவ் காந்தி கேல் ரத்னா விருதும் 2017 ஆம் ஆண்டில் பத்ம ஸ்ரீ விருதும் வழங்கப்பட்டுள்ளது.
துருக்கியின் மெர்சினில் நடைபெற்ற உடற்பயிற்சி சார்ந்த ஒரு சர்வதேச போட்டியான FIG கலைத் திறன் மிக்க உலக சேலஞ்ச் கோப்பைப் போட்டியில் தங்கப் பதக்கம் வென்ற இந்தியாவின் முதலாவது ஜிம்னாஸ்டாக இவர் உருவெடுத்துள்ளார்.