TNPSC Thervupettagam

பார்மலின் மீன்கள் மீதான தடை

January 15 , 2019 2014 days 603 0
  • பீகார் மாநில அரசானது, பாட்னா மாநகராட்சிப் பகுதியில் 15 தினங்களுக்கு மீன்களின் விற்பனை, போக்குவரத்து மற்றும் இருப்பு ஆகியவற்றுக்குத் தடை விதித்திருக்கின்றது.
  • மீன் மாதிரிகளில் பார்மலின், ஈயம், பாதரசம் மற்றும் காட்மியம் ஆகியவற்றின் துணுக்குகள் அதிக அளவில் இருப்பதாக கண்டறியப்பட்ட பிறகு இத்தடை விதிக்கப்பட்டுள்ளது.
  • இத்தடை 2006-ஆம் ஆண்டின் உணவுப் பாதுகாப்பு மற்றும் தரநிர்ணயங்கள் சட்டத்தின்படி விதிக்கப்பட்டிருக்கின்றன.
  • வழக்கமான வரம்பிற்கு அப்பால் பார்மலின் மற்றும் இதர கனமான உலோகங்களின் பயன்பாடு நிமோனியா, மூச்சுக்குழாய் அழற்சி, மஞ்சள் காமாலை மற்றும் புற்றுநோய் போன்ற பல்வேறுபட்ட நோய்களை ஏற்படுத்தும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்