TNPSC Thervupettagam

பார்வைக் கண்ணோட்டத்திலிருந்து நடவடிக்கைகள் : கோவிட் – 19 தொற்றின் மத்தியில் பாலின சமநிலை குறித்த அறிக்கை

September 8 , 2020 1412 days 570 0
  • இது ஐக்கிய நாடுகள் பெண்கள் அமைப்பு மற்றும் ஐக்கிய நாடுகள் வளர்ச்சித் திட்டம் (UNDP – United Nations Development Programme) ஆகியவற்றினால் இணைந்து வெளியிடப் பட்டுள்ளது.
  • இது கோவிட்-19 ஆனது பெண்கள் மீது எதிர்மறைத் தாக்கத்தைக் கொண்டிருப்பதாகவும் பெண்களின் வறுமை விகிதத்தை உயர்த்தி இருப்பதாகவும் வறுமையில் ஆண்கள் மற்றும் பெண்களுக்கிடையேயான இடைவெளியை அதிகரித்திருப்பதாகவும் கூறியுள்ளது.
  • தெற்கு ஆசியாவில் நோய்த் தொற்றிற்கு முந்தைய பெண்ணிய வறுமையானது 2021 ஆம் ஆண்டில் 10% என்று கணிக்கப் பட்டது. இது தற்பொழுது 13% ஆகக் கணிக்கப் பட்டுள்ளது.
  • இந்த நோய்த் தொற்றானது இந்தப் பத்தாண்டின் முடிவில் வறுமையை ஒழிப்பதற்கானச் செயல்பாடுகளை தலைகீழாக மாற்றியுள்ளது. இது 2021 ஆம் ஆண்டில் ஏறத்தாழ 96 மில்லியன் மக்களை வறுமைக்குள் தள்ளவுள்ளது. இதில் 47 மில்லியன் மக்கள் பெண்கள் மற்றும் சிறுமியர் ஆவர்.
  • சர்வதேசத் தொழிலாளர் அமைப்பானது 2020 ஆம் ஆண்டு ஜீன் மாதம் வாக்கில், கோவிட் – 19 நோய்த் தொற்றின் காரணமாக ஏறத்தாழ 72% வீட்டுத் தெழிலாளர்கள் வேலை இழப்பார்கள் என்று கணித்துள்ளது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்