பார்வைக் கண்ணோட்டத்திலிருந்து நடவடிக்கைகள் : கோவிட் – 19 தொற்றின் மத்தியில் பாலின சமநிலை குறித்த அறிக்கை
September 8 , 2020 1539 days 616 0
இது ஐக்கிய நாடுகள் பெண்கள் அமைப்பு மற்றும் ஐக்கிய நாடுகள் வளர்ச்சித் திட்டம் (UNDP – United Nations Development Programme) ஆகியவற்றினால் இணைந்து வெளியிடப் பட்டுள்ளது.
இது கோவிட்-19 ஆனது பெண்கள் மீது எதிர்மறைத் தாக்கத்தைக் கொண்டிருப்பதாகவும் பெண்களின் வறுமை விகிதத்தை உயர்த்தி இருப்பதாகவும் வறுமையில் ஆண்கள் மற்றும் பெண்களுக்கிடையேயான இடைவெளியை அதிகரித்திருப்பதாகவும் கூறியுள்ளது.
தெற்கு ஆசியாவில் நோய்த் தொற்றிற்கு முந்தைய பெண்ணிய வறுமையானது 2021 ஆம் ஆண்டில் 10% என்று கணிக்கப் பட்டது. இது தற்பொழுது 13% ஆகக் கணிக்கப் பட்டுள்ளது.
இந்த நோய்த் தொற்றானது இந்தப் பத்தாண்டின் முடிவில் வறுமையை ஒழிப்பதற்கானச் செயல்பாடுகளை தலைகீழாக மாற்றியுள்ளது. இது 2021 ஆம் ஆண்டில் ஏறத்தாழ 96 மில்லியன் மக்களை வறுமைக்குள் தள்ளவுள்ளது. இதில் 47 மில்லியன் மக்கள் பெண்கள் மற்றும் சிறுமியர் ஆவர்.
சர்வதேசத் தொழிலாளர் அமைப்பானது 2020 ஆம் ஆண்டு ஜீன் மாதம் வாக்கில், கோவிட் – 19 நோய்த் தொற்றின் காரணமாக ஏறத்தாழ 72% வீட்டுத் தெழிலாளர்கள் வேலை இழப்பார்கள் என்று கணித்துள்ளது.