பார்வைத் திறனிழப்புத் தடுப்பு வாரம் 2023 - ஏப்ரல் 01/07
April 8 , 2023 600 days 203 0
இந்திய அரசானது, பார்வைத் திறனிழப்பிற்கான காரணங்கள் மற்றும் தடுப்பு பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்தச் செய்வதற்காக ஒவ்வோர் ஆண்டும் ஏப்ரல் 01 முதல் 07 ஆம் தேதி வரை பார்வைத் திறனிழப்புத் தடுப்பு வாரத்தினை அனுசரிக்கிறது.
இந்த வருடாந்திர நிகழ்வானது, பார்வைக் குறைபாடுகள் உள்ள நபர்களுக்கு ஆதரவு அளித்தல் மற்றும் கண் பராமரிப்பு நலச் சேவைகளுக்கான அணுகலை மேம்படுத்தச் செய்தல் ஆகியவற்றினை நோக்கமாகக் கொண்டுள்ளது.
பண்டிட் ஜவஹர்லால் நேரு மற்றும் இந்தியாவின் முதல் சுகாதார அமைச்சரான ராஜ் குமாரி அம்ரித் கவுர் ஆகியோர் தேசியப் பார்வைத் திறனிழப்புத் தடுப்பு சங்கத்தினை நிறுவினர்.
ஒரு வார கால அளவிலான இந்த அனுசரிப்பு நிகழ்வானது 1960 ஆம் ஆண்டில் தொடங்கப் பட்டது.