ஜவஹர்லால் நேரு மற்றும் இராஜா குமாரி அம்ரித் கௌர் ஆகியோர் 1860 ஆம் ஆண்டு சங்கங்கள் பதிவுச் சட்டத்தின் கீழ் 1960 ஆம் ஆண்டில் தேசியப் பார்வைத் திறன் இழப்பு தடுப்புச் சங்கத்தை நிறுவினர்.
இந்திய அரசானது, ஏப்ரல் 01 முதல் ஏப்ரல் 07 ஆம் தேதி வரையிலான தேதிகளை பார்வைத் திறன் இழப்பு தடுப்பு வாரமாக அறிவித்துள்ளது.
பார்வைத் திறன் இழப்பிற்கு காரணாமன பல்வேறு எண்ணற்ற காரணிகள் பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்துவதை இந்த வாரம் நோக்கமாகக் கொண்டுள்ளது.
இது கண்ணில் ஏற்படும் பல்வேறு காயங்கள், பார்வைக் குறைபாடுகள், பயன்மிக்க தடுப்பு நடவடிக்கைகள், சிகிச்சை முறைகள் மற்றும் பல சாத்தியமான சிகிச்சைகள் குறித்து மக்களுக்குக் கற்பிக்க முயல்கிறது.