TNPSC Thervupettagam

பார் கவுன்சில் தேர்தல்

March 29 , 2018 2433 days 1054 0
  • ஏழு ஆண்டுகளுக்குப் பிறகு தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி பார் கவுன்சிலுக்கான (Bar Council of Tamil Nadu and Puducherry - BCTNP) தேர்தல் நடைபெற்றுள்ளது.
  • இதற்குமுன் தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி பார் கவுன்சிலுக்கான தேர்தல் 2011 ஆம் ஆண்டு  நடைபெற்றது.
  • இத்தேர்தல் இந்திய பார் கவுன்சிலினால் (Bar Council of India) நியமிக்கப்பட்ட தேர்தல் அதிகாரிகள் (Returning Officers)  மற்றும் முன்னாள் சென்னை உயர்நீதிமன்ற நீதிபதிகளானM. அக்பர் அலி மற்றும் T. மதிவாணன்  ஆகியோரால் மேற்பார்வை செய்யப் பட்டது.
  • வழக்கறிஞர்களாகத் தொடர்ந்து 10 ஆண்டு காலமாகப் பணிபுரிந்தவர்கள் பார் கவுன்சில் தேர்தலில் போட்டியிடத் தகுதி உடையோராவர்.
  • தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி  பார் கவுன்சிலினுடைய 25 உறுப்பினர் இடங்களுக்கு  மொத்தம் 192 பேர் போட்டியிடுகின்றனர். இத்தேர்தலில் மொத்த வாக்காளர்களின் எண்ணிக்கை   53,620 ஆகும்.
  • முந்தைய தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி  பார் கவுன்சிலின்  ஐந்தாண்டு பதவிக் காலம் நிறைவடைந்ததைத் தொடர்ந்து, தற்போதுவரை  தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி பார் கவுன்சிலானது இந்திய பார் கவுன்சிலால் நியமிக்கப்பட்ட,  மாநில அரசுத் தலைமை வழக்கறிஞரான விஜய் நாரயணின் தலைமையில் உள்ள சிறப்புக் குழுவின் தற்காலிக நிர்வகிப்பின் (temporary administration) கீழ் உள்ளது.
 

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்