TNPSC Thervupettagam

பாறுக் கழுகுகள் பாதுகாப்புத் திட்டம்

October 25 , 2022 636 days 652 0
  • ஆபத்தான நிலையில் உள்ள பாறுக் கழுகுகளைப் பாதுகாப்பதற்கான திட்டத்தினை தமிழ்நாடு அரசு சமீபத்தில் தொடங்கியுள்ளது.
  • இரண்டு ஆண்டு பதவிக்காலம் கொண்ட மாநில அளவிலான ஒரு குழு, கழுகுகளின் தற்போதைய வாழிடங்களின் பாதுகாப்பு மற்றும் மீட்பு மற்றும் பாதுகாப்பான மண்டலங்களை உருவாக்குவதற்காக மாநிலம் முழுவதும் உள்ள கழுகுகளின் எண்ணிக்கையைக் கணக்கெடுத்து, நடவடிக்கை எடுக்க உள்ளது.
  • கழுகுகளின் இறப்பிற்கான முக்கியக் காரணமான நச்சுத்தன்மை வாய்ந்த கால்நடை மருந்துகளின் (டைக்லோஃபெனாக்) பயன்பாட்டினை அகற்றச் செய்வதற்காக இக்குழு பணியாற்றும்.
  • பாறுக் கழுகுகளின் முக்கிய உணவான மாடுகளின் சடலங்களில் நச்சுத்தன்மை உண்டாவதைத் தடுப்பதும் புதிதாக அமைக்கப்பட்டுள்ள குழுவின் பொறுப்புகளில் ஒன்றாகும்.
  • இந்தியாவில் 9 வகையான பாறுக் கழுகுகள் காணப்படுகின்றன.
  • இந்த ஒன்பது இனங்களில், 4 மிகவும் ஆபத்தான நிலையில் உள்ள பாறுக் கழுகு இனங்களாகவும், ஒன்று ஆபத்தான நிலையில் உள்ள பாறுக் கழுகு உயிரினம் என்றும் IUCN அமைப்பின் சிவப்புநிறப் பட்டியலில் பட்டியலிடப்பட்டுள்ளன.
  • தமிழ் நாட்டில் நான்கு வகையான பாறுக் கழுகுகள் காணப்படுகின்றன. அவை
    • ஓரியண்டல் வெண் முதுகு கழுகு
    • நீண்ட அலகு கொண்ட கழுகு
    • செந்தலை கழுகு மற்றும்
    • எகிப்திய கழுகு.
  • இதில் முதல் மூன்று இனங்கள் உள்நாட்டு இனங்கள் ஆகும் என்பதோடு அவற்றை நீலகிரி மற்றும் சத்தியமங்கலம் ஆகிய பகுதிகளில் காணலாம்.
  • தர்மபுரியில் ஒரேயொரு இடத்தில் மட்டும் எகிப்தியக் கழுகுகள் இனப்பெருக்கம் செய்யப் பட்டதற்கான சான்றுகள் உள்ளன.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்