ஆபத்தான நிலையில் உள்ள பாறுக் கழுகுகளைப் பாதுகாப்பதற்கான திட்டத்தினை தமிழ்நாடு அரசு சமீபத்தில் தொடங்கியுள்ளது.
இரண்டு ஆண்டு பதவிக்காலம் கொண்ட மாநில அளவிலான ஒரு குழு, கழுகுகளின் தற்போதைய வாழிடங்களின் பாதுகாப்பு மற்றும் மீட்பு மற்றும் பாதுகாப்பான மண்டலங்களை உருவாக்குவதற்காக மாநிலம் முழுவதும் உள்ள கழுகுகளின் எண்ணிக்கையைக் கணக்கெடுத்து, நடவடிக்கை எடுக்க உள்ளது.
கழுகுகளின் இறப்பிற்கான முக்கியக் காரணமான நச்சுத்தன்மை வாய்ந்த கால்நடை மருந்துகளின் (டைக்லோஃபெனாக்) பயன்பாட்டினை அகற்றச் செய்வதற்காக இக்குழு பணியாற்றும்.
பாறுக் கழுகுகளின் முக்கிய உணவான மாடுகளின் சடலங்களில் நச்சுத்தன்மை உண்டாவதைத் தடுப்பதும் புதிதாக அமைக்கப்பட்டுள்ள குழுவின் பொறுப்புகளில் ஒன்றாகும்.
இந்தியாவில் 9 வகையான பாறுக் கழுகுகள் காணப்படுகின்றன.
இந்த ஒன்பது இனங்களில், 4 மிகவும் ஆபத்தான நிலையில் உள்ள பாறுக் கழுகு இனங்களாகவும், ஒன்று ஆபத்தான நிலையில் உள்ள பாறுக் கழுகு உயிரினம் என்றும் IUCN அமைப்பின் சிவப்புநிறப் பட்டியலில் பட்டியலிடப்பட்டுள்ளன.
தமிழ் நாட்டில் நான்கு வகையான பாறுக் கழுகுகள் காணப்படுகின்றன. அவை
ஓரியண்டல் வெண் முதுகு கழுகு
நீண்ட அலகு கொண்ட கழுகு
செந்தலை கழுகு மற்றும்
எகிப்திய கழுகு.
இதில் முதல் மூன்று இனங்கள் உள்நாட்டு இனங்கள் ஆகும் என்பதோடு அவற்றை நீலகிரி மற்றும் சத்தியமங்கலம் ஆகிய பகுதிகளில் காணலாம்.
தர்மபுரியில் ஒரேயொரு இடத்தில் மட்டும் எகிப்தியக் கழுகுகள் இனப்பெருக்கம் செய்யப் பட்டதற்கான சான்றுகள் உள்ளன.