நீண்டகாலமாக நிலவி வரும் மோதல் போக்கை முடிவுக்கு கொண்டுவரும் விதமாக பாலஸ்தீனத்தின் முக்கிய எதிரெதிர் அரசியல் கட்சிகளான ஹமாஸ் மற்றும் பதாஹ் இரண்டும் எகிப்தின் மத்தியஸ்தத்துடன் சமரச உடன்படிக்கையில் கையெழுத்திட்டுள்ளன.
ஒப்பந்தம் கையெழுத்திடப்பட்ட ஒரு வருடத்திற்குள் தேசிய பேரவை, சட்டமன்றம் மற்றும் அதிபர் பதவி போன்றவற்றிற்கான தேர்தல் நடத்தப்பட வேண்டும் என்பதை இந்த உடன்படிக்கை முன்மொழிகிறது.
2011 ஆம் ஆண்டு கையெழுத்திடப்பட்டு செயல்பாட்டில் இல்லாமல் உள்ள ஒற்றுமை ஒப்பந்தத்தை (Unity agreement) அமல்படுத்துவதற்காக இந்த சமரச உடன்படிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.