TNPSC Thervupettagam

பாலஸ்தீன தேசத்தின் தேர்தல்கள்

January 20 , 2021 1334 days 525 0
  • 14 ஆண்டுகளுக்குப் பிறகு பாலஸ்தீனம் 2021 ஆம் ஆண்டில் அதன் முதல் தேசிய தேர்தலை நடத்த உள்ளது.
  • பாராளுமன்றம், அதிபர் மற்றும் தேசிய மன்றத் தேர்தல்கள் ஆகிய மூன்று தேர்தல்களும் பாலஸ்தீனத்தில் 2021 ஆம் ஆண்டில் நடத்தப்படும்.
  • 2007 ஆம் ஆண்டில் ஹமாஸ் ஆனது காசா பகுதியை கைப்பற்றியதிலிருந்து ஹமாஸ் மற்றும் ஃபத்தா ஆகிய இரண்டு பாலஸ்தீனியக் குழுக்களும் ஒருவருக்கொருவர் எதிராக இருந்து வருகின்றன.
  • இருப்பினும், 2020 ஆம் ஆண்டின் செப்டம்பரில், இரு குழுக்களும் துருக்கியில் சந்தித்து பாராளுமன்றம் மற்றும் அதிபர் ஆகியவற்றுக்கான தேர்தல்களை நடத்த ஒப்புக் கொண்டன.
  • அதிபர் மஹ்மூத் அப்பாஸ் அடுத்த தேர்தல் வரை பாலஸ்தீன அதிபராக இருக்க ஒப்புக்கொண்டார்.
  • ஆனால் அவர் மேற்குக் கரைப் பகுதியில் மட்டுமே அதிபராக அங்கீகரிக்கப் படுகிறார், ஹமாஸ் கட்டுப்பாட்டில் உள்ள காசா பகுதியால் அல்ல.
  • பாலஸ்தீனத்தின் முதல் பாராளுமன்ற மற்றும் அதிபர் தேர்தல்கள் 1996 ஆம் ஆண்டில் நடத்தப் பட்டன.
  • பாலஸ்தீனிய தேசிய ஆணையமானது ஃபத்தா என்ற கட்சி ஆதிக்கம் செலுத்தும் விதத்தில் ஒரு பல கட்சி முறையைக் கொண்டுள்ளது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்