மைசூரில் உள்ள அறிவியல் மற்றும் தொழிலக ஆராய்ச்சி மன்றத்தின் (CSIR) – மத்திய உணவுத் தொழில்நுட்ப ஆராய்ச்சி நிறுவனத்தினால் (Central Food Technological Research Institute - CFRTI) மேற்கொள்ளப்பட்ட ஒரு விரிவான ஆய்வானது பாலிஎத்திலீன் டெரிப்தாலேட் குப்பிகள் (பாட்டில்கள்) பாதுகாப்பானவை என்று தீர்மானித்துள்ளது.
CFRTI ஆய்வானது ஆன்டிமணி, ஆர்செனிக், பேரியம், காட்மியம், குரோமியம், கோபால்ட், காரீயம், பாதரசம், செலினியம் மற்றும் துத்தநாகம் ஆகியவை அதன் கண்காணிப்பு வரம்பான 0.001 மில்லி கிராம் / கிலோ கிராமை விடக் குறைவாக உள்ளது என்று முடிவு செய்துள்ளது.