TNPSC Thervupettagam

பாலிகடான் கூட்டு இராணுவப் பயிற்சி 2025

April 24 , 2025 17 hrs 0 min 24 0
  • பிலிப்பைன்ஸ் நாடானது அமெரிக்கா, ஆஸ்திரேலியா, ஜப்பான் ஆகிய சில நாடுகள் பங்கேற்கும் பாலிகடான் கூட்டு இராணுவப் பயிற்சியினை நடத்த உள்ளது.
  • இந்தப் பாலிகடான் பயிற்சியானது, 2002 ஆம் ஆண்டு முதல் பிலிப்பைன்ஸ் மற்றும் அமெரிக்காவிற்கு இடையே நடத்தப்பட்டு வரும் வருடாந்திரப் பயிற்சி ஆகும்.
  • ஜப்பான் நாடானது, இந்த ராணுவப் பயிற்சியில் முதல் முறையாக அதிகாரப்பூர்வமாக பங்கேற்க உள்ளது.
  • இது முதன்மையாக தென் சீனக் கடல் மற்றும் லூசான் ஜலசந்தியில் அமைந்துள்ள நெருக்கடிகள் மிக்க பகுதிகளுக்கு அருகில் உள்ள பலவான் மற்றும் லுசோன் ஆகிய தீவுகளைப் பாதுகாப்பதில் கவனம் செலுத்துகிறது.
  • பாலிகடான் என்றால், டாகாலோக்  எனப்படுகின்ற மிக முதன்மையான மொழியான ஆஸ்ட்ரோஆசிய மொழியில் "தோளோடு தோள் கொடுத்தல்” (shoulder-to-shoulder) எனப் பொருள்படும்.
  • மேலும், இந்த ஆண்டில் சுமார் பத்தொன்பது நாடுகளானது இப்பாலிகடான் பயிற்சிக்கு பார்வையாளர்களை அனுப்பியுள்ளன.
  • கனடா, ஜெர்மனி, ஐக்கியப் பேரரசு, செக் குடியரசு, போலந்து மற்றும் கொலம்பியா ஆகியவை பார்வையாளர்களை அனுப்புவதை முதலில் உறுதி செய்தன.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்