அமெரிக்கா மற்றும் பிலிப்பைன்ஸ் ஆகிய இருநாடுகளும் 34-வது மிகப்பெரிய வருடாந்திர இருதரப்பு இராணுவப் பயிற்சியான பாலிகட்டானைத் தொடங்கியுள்ளன. பாலிகட்டான் எனும் பிலிப்பைன் வார்த்தைக்கு “புயம் முதல் புயம்” (Shoulder to Shoulder) அல்லது ஒருவருக்கொருவர் சுமைகளை பரிமாறிக் கொள்ளுதல் என்று பொருள்.
ஆஸ்திரேலியாவும், ஜப்பானும் இந்தப் பயிற்சியில் கூர்நோக்கு நாடுகளாக இணைந்துள்ளன.
இந்த பயிற்சி பரஸ்பர பாதுகாப்பு, பயங்கரவாத எதிர்ப்பு, மானுட உதவி மற்றும் பேரிடர் மீட்பு உள்ளிட்ட பல்வேறு திட்டங்களின் மீது கவனம் செலுத்தும்.