பாலினச் சமத்துவத் தகவல் விளக்கப் படம் 2023 அறிக்கை
September 13 , 2023 438 days 333 0
ஐக்கிய நாடுகள் சபையின் பெண்கள் மற்றும் ஐக்கிய நாடுகள் சபையின் பொருளாதார மற்றும் சமூக விவகாரங்கள் துறை ஆகியவற்றினால் ‘நிலையான மேம்பாட்டு இலக்குகளின் முன்னேற்றம்: பாலினச் சமத்துவ தகவல் விளக்கப் படம் 2023’ அறிக்கை என்ற தலைப்பில் வெளியிடப்பட்டுள்ளது.
2030 ஆம் ஆண்டிற்குள் பாலினச் சமத்துவத்தை அடைதல் என்ற இலக்கினை எட்டச் செய்வதற்கான பல நடவடிக்கைகள் போதுமானதாக இல்லை என்று இந்த அறிக்கை தெரிவிக்கிறது.
2023 ஆம் ஆண்டில், உலகளவில் 65 வயது மற்றும் அதற்கு மேற்பட்டவர்களில் 55.7% பேர் பெண்கள் ஆவர்.
இன்று ஒவ்வொரு பத்து பெண்களில் ஒருவர், அதாவது 10.3% பேர், வறுமை மிகுந்த நிலையில் வாழ்கின்றனர்.
தற்போதைய போக்குகள் தொடர்ந்தால், 2030 ஆம் ஆண்டில் உலகின் 8% பெண்கள் இன்னும் கடுமையான வறுமை நிலையில் வாழ்வார்கள் என்று இந்த அறிக்கையில் கணிக்கப்பட்டுள்ளது.
2023 ஆம் ஆண்டில் உலகளவில் 129 மில்லியன் பெண்கள் மற்றும் இளம் பெண்கள் பள்ளிகளில் கல்வி பயிலாமல் உள்ளதாக அறிக்கை கூறுகிறது.
தற்போதைய போக்குகள் தொடர்ந்தால், 2030 ஆம் ஆண்டில் சுமார் 110 மில்லியன் பேர் பள்ளிகளில் கல்வி பயில இயலாமல் இருப்பர்.
2030 ஆம் ஆண்டிற்குள் உலகின் பல முக்கியப் பகுதிகளில் பாலினச் சமத்துவத்தை அடைவதற்காக 48 வளர்ந்து வரும் நாடுகளில் ஆண்டிற்கு 6.4 டிரில்லியன் அமெரிக்க டாலர் தேவைப்படுகிறது.
2050 ஆம் ஆண்டில், உலகில் 65 மற்றும் அதற்கு மேற்பட்ட வயதுடைய 1.6 பில்லியன் நபர்கள் இருப்பர் என்ற நிலையில் அவர்களில் 78.1% பேர் குறைவான வளர்ச்சியடைந்த நாடுகளில் வசிப்பர்.
27 நாடுகளில் மட்டுமே, பாலினச் சமத்துவம் மற்றும் பெண்களுக்கு அதிகாரமளித்தல் ஆகியவற்றைக் கண்காணிக்கவும், நிதி ஒதுக்கீடுகளைச் செய்வதற்குமான விரிவான கட்டமைப்புகள் உள்ளன.
தொழிலாளர் வளத்தில் பணிக்குச் செல்லும் வயதிலான ஆண்களின் பங்கு சுமார் 90 சதவீதமாக இருக்கையில், அதில் பணிக்குச் செல்லும் வயதிலான பெண்களின் பங்கு 61.4% மட்டுமே ஆகும்.